skip to main |
skip to sidebar
சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக அங்காடித்தெரு தேர்ந்தெடுக்கப்பட்டது. டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் புதுமுகம் மகேஷ் - நடிகை அஞ்சலி நடித்த படம் அங்காடித் தெரு. இந்த ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த படம், சென்னை திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் படும் அவஸ்ததைகளையும், துன்பங்களையும் விவரிக்கும் இந்த படம், தன்னம்பிகையை பறைசாற்றும் விதமாகவும் இருந்தது. இப்படத்தினை பார்த்த சில அடுக்குமாடி ஜவுளி நிறுவன நிர்வாகம் தங்களது ஊழியர்களுக்கு சிலபல வசதிகளை செய்து கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. அறிமுக நாயகன் என்று சொல்ல முடியாத அளவுக்கு புதுமுகம் மகேஷ் கலக்கலாக நடித்திருந்தார். அஞ்சலியும் தன் பங்கை அசத்தலாக செய்திருந்தார். திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் பரிசை அள்ளிச் சென்ற அங்காடித்தெரு, சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் முதல் பரிசை பெற்றுள்ளது. இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பெருமை பொங்க சொல்கிறார் டைரக்டர் வசந்தபாலன்